For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண ஆசை கூறி ஏமாற்றப்படும் பெண்களை பாதுகாக்க விரைவில் புதிய சட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க புதியசட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் காவல்துறை நிர்வாகம் குறித்த ஒட்டுமொத்த ஆய்வை அவர் மேற்கொண்டார். மூத்த காவல்துறைஅதிகாரிகள் பங்கேற்ற க் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்விவரம்:

* சென்னை, கோவையில் இருப்பதைப் போல மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களில்விரைவில் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பெண்கள் தொடர்பான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும்.

* பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோருக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே,அப்படிப்பட்டவர்கள் தப்பித்து விடாமல் தீவிர விசாரணை நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில்மகளிர் காவலர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதகற்காக மாநிலத்தின் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கும் சிறப்பு புலனாய்வுப் பயிற்சி அளிக்கப்படும்.

*திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு பின்னர் பெண்களை ஏமாற்றும் மோசடி நபர்களைத் தண்டிக்க புதியசட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.

* நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை எதிர்கொள்ள காவல்துறைக்குப் புதிதாக 80 ரோந்து வாகனங்கள்வழங்கப்படும். இந்த வாகனங்களில் ரூ. 4 கோடி செலவில் ரேடார் கன், மூச்சுத்

திணறலை சரி செய்யும் ஆக்சிஜன் கருவி, முதலுதவிப் பெட்டி ஆகியவை இருக்கும். முக்கிய நெடுஞ்சாலைகளில்இந்த முதலுதவி ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

* வாகனங்களை அதி வேகமாக ஓட்டி, சாலையில் செல்வோரை விபத்துக்குள்ளாக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சரி பார்த்து மீண்டும்வழங்கும் முறையைக் கொண்டு வர வேண்டும். தாறுமாறாக வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.

* குற்றங்களில் ஈடுபடுவோர் தப்பித்து விடாமல் இருக்க அவர்களை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஜிபி கோவிந்த், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி வெங்கடகிருஷ்ணன், புலனாய்வுபிரிவு கூடுதல் டிஜிபி நடராஜன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஜயக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X