For Daily Alerts
Just In
குற்றால அருவிகளில் வெள்ளம் .. குளிப்பதற்கு போலீஸ் தடை
தென்காசி:
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் போல நீர் கொட்டுவதால்மெயின் அருவி உள்ளிட்ட சில அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
குற்றாலத்தில் இந்த ஆண்டு தாமதமாகவே சீசன் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அருவிகளில்நீர்ப்போக்கு அதிகமாக உள்ளது.
இதனால் வெள்ளம் போல நீர் கொட்டுகிறது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவிஉள்ளிட்ட சில அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதனால் அருவிகளில் குளிக்க வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வெறுமனேஅருவிக்கு அருகில் நின்று பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.


