For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமராஜர் பிறந்தநாள்: விருதுநகரை கலக்கிய காங்கிரஸ் கோஷ்டிகள்!

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

காமராஜர் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோலாகலமாககொண்டாடப்பட்டது.

திராவிட கட்சிகளின் பாணியில் விழாவை படு அமர்க்களமாக நடத்திய காங்கிரஸ் கட்சி, கோஷ்டிப் பூசலையும்வெளிப்படுத்தத் தவறில்லை.

காமராஜரை நினைவு கூறுவதை விட, யார் பெரியவர் என்பதை காட்டுவதிலேயே ஒவ்வொரு கோஷ்டியும்தீவிரமாக ஈடுபட்டு இருந்ததைக் காண முடிந்தது.

கட் அவுட்டில் ஆரம்பித்து பேச்சாளர்கள் வரை தங்களது கோஷ்டி கானம் பாட மறக்கவில்லை.

காமராஜர், சோனியா காந்தி, ராஜீவ் காந்திக்கு இணையாக இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோகுரக்கும்அவரவர் ஆதரவாயளர்களால் ஏராளமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் போஸ்டரைக் கூடக் காண முடியவில்லை. இது அவருக்கு கட்சியில்எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை அப்பட்டமாகக் காட்டியது.

பொதுக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர்பேசுகையில், விருதுநகரில் அமையவுள்ள காமராஜர் நினைவிடத்திற்கு, சென்னைத் தலைமைச் செயலகத்தில், குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கல் நாட்டும் ஜெயலலிதாவுக்கு ஆணவம் அதிகமாகிவிட்டது என்றார்இளங்கோவன்.

விழாவில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கமல்நாத், சத்யஜித்கெய்க்வாட் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கோஷ்டிப் பூசல் தெந்தாலும் பெரிய அளவில் அது வெடிக்காமல் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டு பொதுக்கூட்டத்தை ஒரு வழியாக சிறப்பாக நடத்தி முடித்து விட்டனர் தலைவர்கள் என்று காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதிப்பெருமூச்சுடன் பேசிக் கொண்டதையும் கேட்க முடிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X