தாய், மகள் மீது கஞ்சா வழக்கு ஏன்?: இளங்கோவன் சந்தேகம்
கோயம்புத்தூர்:
மதுரையில் தாய், மகள் மீது போடப்பட்டுள்ள கஞ்சா வழக்கு, யாரை மிரட்டுவதற்காகப் போடப்பட்டது என்றுமுதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த செரினா, ஜனனி ஆகிய தாய், மகள்களுக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும் தொடர்புஇருப்பதாகவும், இதையடுத்து சசிகலாவின் நிர்பந்தத்தால், அவர்கள் மீது பொய்யாக கஞ்சா கேஸ் போட்டு உள்ளேதள்ளியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் இளங்கோவன் பேசுகையில்,
தனக்குப் பிடிக்காதவர்களை பழி வாங்குவது ஜெயலலிதாவுக்கு கை வந்த கலை. தன்னை வளர்த்த எம்.ஜி.ஆரின்உதவியாளர் மீதே கஞ்சா வழக்குப் போட்டார். பின்னர் ஏதோ விவகாரத்தில் (பணம்?) தனது வளர்ப்பு மகன்சுதாகரன் மீதே கஞ்சா வழக்குப் போட்டார்,
இப்போது மதுரையைச் சேர்ந்த செரீனா, ஜனனி ஆகிய பெண்கள் மீது கஞ்சா வழக்குகள் போடப்பட்டுள்ளன.யாரைக் குறி வைத்து, யாரை மிரட்டுவதற்காக இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பதை அறிய தமிழகமக்கள் அறிய ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த விளக்கத்தை மக்களுக்குத் தர வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு என்றார் இளங்கோவன்.


