பெங்களூர் அனுப்பப்பட்ட பாலில் கலப்படம்: 2 தமிழக பால் பண்ணைகளுக்கு சீல்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பால் பண்ணைகளில் இருந்து பெங்ளூருக்கு அனுப்பப்பட்டு வரும் பாலில்பெருமளவில் வேதிப் பொருள்கள் கலக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், ஈரோட்டைச் சேர்ந்த 2 பால் நிறுவனங்களுக்கு தமிழகஅரசு சீல் வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 711 கூட்டுறவு பால் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில் 25 பண்ணைகள், தனியாருக்குச்செந்தமானவை. விவசாயிகளிடம் இருந்து இங்கு கொள்முதல் செய்யப்படும் பால் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுவருகிறது.
இங்கிருந்து பெங்களூருக்கு தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. ஆனால், இந்தப் பாலில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாக கர்நாடக சட்ட சபையில் இரு தினங்களுக்கு முன் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாலை கர்நாடக அரசு ஆய்வு செய்தபோது அதில் அபாயகரமான அமிலம் உள்ளிட்ட பல்வேறுவேதிப் பொருட்கள் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு பகுதியிலிருந்து அனுப்பப்பட்ட 33,000லிட்டர் பாலை கர்நாடக அரசு சாக்கடையில் கொட்டச் செய்தது.
மேலும் தமிழகத்தில் இருந்து பாலை வாங்குவதை மறுபரிசீலை செய்யப் போவதாகவும் அறிவித்தது. இதனால்பல்லாயிரக்கணக்கான ஈரோடு மாவட்ட பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் குற்றச்சாட்டையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 25 தனியார் பால் பண்ணைகளிலும்சோதனை நடத்த கலெக்டர் பாலச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்தத் தனியார் பால் பண்ணைகளில் அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர்.இதில், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி, பெரியசெம்பூர் ஆகிய இடங்களில் உள்ள 2 தனியார் பால்பதப்படுத்தும் நிறுவனங்கள் முறையான உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் பாலின் நிறத்தையும் திடத்தையும் அதிகரிப்பதற்காக அபாயகரமான வேதிப் பொருள்களும்இங்கு கலக்கப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து இந்த இரண்டு பால் பண்ணைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்த பால் பாட்டில்கள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள தரப் பரிசோதனைமையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரண்டு பால் பண்ணைகளின் உரிமையாளர்கள்மதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.


