திமுகதான் உண்மையான மதச்சார்பற்ற கட்சி: இளங்கோவன்
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், திமுகவை நாங்கள் உண்மையான மதச்சார்பற்றகட்சியாகத்தான் பார்க்கிறோம் என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுனார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், திமுக உண்மையான மதச்சார்பற்ற கட்சியாகும்.
அதுபோலவே, சிறுபான்மை மக்களுக்குப் பிரச்சினை நேரும்போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுக்ககலைஞரும் தவறுவதில்லை.
இருப்பினும், திமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது சரியல்ல. உடனடியாக அங்கிருந்துவெளியேற வேண்டும். நம்பத்தகுந்த மதச்சார்பற்ற கட்சியான திமுக, மத வெறி பிடித்த பா.ஜ.கவுடன் கூட்டணியில்நீடிப்பது சயல்ல.
தமிழகத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் 32 பேர் இதுவரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச்செய்தி உண்மையாக இருக்குமானால் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது.
அரசு ஊழியர்கள் எவ்வளவோ இறங்கி வந்தும் கூட தமிழக அரசு வீண் பிடிவாதமாக இருப்பது என்ன நியாயம்என்று தெரியவில்லை. நேரடி விசாரணை போன்ற காலதாமதப்படுத்தும் செயல்களை விட்டுவிட்டு, டிஸ்மிஸ்செய்யப்பட்ட அனைவரையும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த சிவாஜி கணேசன் நினைவு நாள் நிகழ்ச்சியையொட்டி, அங்குவைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் படத்திற்கு இளங்கோவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


