வேன் மீது ரயில் மோதி 4 பள்ளி குழந்தைகள் சாவு
கரூர்:
கரூர் அருகே தெற்கு ரயில்வே பொது மேலாளர் வி.ஆனந்த் பயணம் செய்த சோதனை ரயில் வேன் மீதுமோதியதில், அதில் பயணம் செய்த 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வழக்கம் போலநேற்று மாலை வேனில் வீடுகளுக்குக் கிளம்பினர்.
வேனில் டிரைவர், கிளீனர் தவிர 8 மாணவ, மாணவியர் இருந்தனர். நடுப்பாளையம் என்ற இடத்தில் சிலமாணவர்களை இறக்கி விட்டு விட்டு வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது, கரூர்-திண்டுக்கல் ரயில் மார்க்கத்தில், எமூர் என்ற இடத்தில், ஆளில்லா ரயில்வே கிராசிங்கைக் கடக்கவேன் முயன்றுள்ளது.
அப்போது சோதனை ரயில் வந்து விட்டதால் வேன் மீது ரயில் மோதி சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
இதில் வேனில் இருந்த 4 பள்ளிக் குழந்தைகள் மற்றும் கிளீனர் இறந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.
வேன் டிரைவர் காயமின்றித் தப்பினார். விபத்துக்குப் பிறகு அவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
காயமடைந்தவர்கள் கரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோதனை ரயில்திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வி.ஆனந்த், பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் அமர்நாத்உள்ளிட்டவர்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


