For Daily Alerts
Just In
எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவு
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. (பத்தாம் வகுப்பு) துணைத் தேர்வில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட5 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அவற்றின் முடிவுகள் நேற்றுவெளியிடப்பட்டன.
மொத்தம் 1,00768 மாணவர்கள தேர்வு எழுதினர். அவர்களில் 34,799 ஆகியோர் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 34.53 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இந்த விகிதம் 40.9 ஆக இருந்தது.
மெட்ரிகுலேஷனைப் பொருத்தவரை தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதம் 46.62 ஆக உள்ளது.கடந்த ஆண்டு இது 41.76 சதவீதமாக இருந்தது.


