புகார் கொடுக்க வந்தவருக்கு பளார்!
சென்னை:
புகார் கொடுக்க வந்த பெண்ணை அறைந்த, பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை அருகே உள்ள ஆவடி நேரு பஜார் பகுதியில் வசித்து வருபவர் பாத்திமா. காய் விற்கும் தொழிலைசெய்து வருகிறார்.
இவரது மகள் கதீஜாவுக்கும், கலீல் அகமது என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணத்திற்குப் பிறகு ஹாங்காங்கில் வேலை பார்க்கச் சென்றார் அகமது. அதன் பின்பு அவர் சென்னைதிரும்பவில்லை.
மாறாக, போன் மூலம் கதீஜாவைத் தொடர்பு கொண்ட அவர், கூடுதலாக வரதட்சணை கொடுத்தால்தான் உன்னுடன்வசிக்க வருவேன். இல்லாவிட்டால் இங்கேயே செட்டிலாகி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ஆனால், தனது தாயார் வறுமையில் வாடுவதால் வரதட்சணை கொடுக்க இயலாது என்று கணவரிடம்கெஞ்சியுள்ளார் கதீஜா. அதை அகமது காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந் நிலையில் அவர் சென்னைக்குத்திரும்பினார். ஆனால், கதீஜாவுடன் சேர்ந்து வசிக்க மறுத்து வந்தார்.
வேறு வழி தெரியாத கதீஜாவும், பாத்திமாவும், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.ஆனால், அங்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலக புகார் பிரிவுக்குச் சென்று மனு கொடுத்தனர். மனு மீதுஉடனடியாக விசாரணை நடத்துமாறு முதல்வரின் புகார்ப் பிரிவு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையஇன்ஸ்பெக்டர் முருசியாவுக்கு உத்தரவு அனுப்பியது.
இதையடுத்து பாத்திமா, கதீஜா, அவரது கணவர் கலீல் அகமது, உறவினர் நஜீப் ஆகியோரை காவல் நிலையத்திற்குவரவழைத்து விசாரணை நடத்தினார் முருசியா.
அப்போது முதல்வரிடம் போய் விட்டால் நீ நினைத்தது நடந்து விடுமா என்று கேட்டு பாத்திமாவின் கன்னத்தில்இன்ஸ்பெக்டர் முருசியா அறைந்துள்ளார். முதல்வர் அலுவலகத்தில் போய் புகார் கொடுக்கும் அளவுக்கு நீ என்னபெரிய இவளா என்று கேட்டு, தரக்குறைவாகவும் திட்டியுள்ளார்.
அதிர்ந்து போன 54 வயதான பாத்திமா, உடனே அங்கிருந்து அழுதபடியே வெளியேறி ஆவடி துணைக்கண்காணிப்பாளர் வீரபாண்டியனிடம் புகார் தெரிவித்தார்.
புகாரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கரிடம் அனுப்பினார் வீரபாண்டியன். இதுகுறித்துவிசாரணை நடத்த கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டார். விசாரணையில் பாத்திமாவை இன்ஸ்பெக்டர்அறைந்ததும், கேவலமாகப் பேசியதும் கூறியது உண்மை என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருசியாவை சஸ்பெண்ட் செய்து காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கர்உத்தரவிட்டார்.
முருசியா, ஏற்கனவே முன்பு வேலை பார்த்த இடங்களிலும் இதுபோல தவறாக நடந்து கொண்டு விசாரணைக்குஉட்பட்டு தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


