For Daily Alerts
Just In
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சிலை உடைந்தது
திருச்சி:
ஆசியாவிலேயே மிகப் பெரிய கோவில் கோபுரம் என்ற பெருமை படைத்த திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமிகோவில் கோபுரத்தில் உள்ள ஒரு சிலையின் தலை உடைந்து கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிலையின் தலை உடைந்து விழுந்தால் ஊருக்கு நல்லதல்ல என்று பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஆனால்,விழுந்தது தலை இல்லை, பெயின்ட்தான் உதிர்ந்து விழுந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோவில் கலசம் விழுந்தால்தான் பரிகார பூஜைகள் செய்யப்படும், சிலையின் தலை உடைந்ததால் ஆபத்து ஏதும்நிகழாது என்று ஸ்ரீரங்கம் ஜீயர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


