For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் சம்பளத்திற்காக காத்திருக்கும் தற்காலிக அரசு ஊழியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாடு முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு அரசுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 15,000 தற்காலிகஊழியர்களுக்கு வருகிற 31ம் தேதி, முதல் சம்பளம் வழங்கப்படுகிறது.

இதனால் அவர்கள் அனைவரும் மிகுந்த பரவசத்துடன் காத்துள்ளனர்.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டதால் தமிழகம் முழுவதிலும் 2லட்சம்பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தற்காலிக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு1000 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். மொத்தம் 15,000 தற்காலிக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் வருகிற 31ம் தேதி, முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் அனைவரும் மிகுந்தபரவசத்துடன் காத்துள்ளனர்.

இந்த வேலை நிரந்தரமாகுமா, அல்லது எப்போது வீட்டுக்கு அனுப்புவார்கள் என்ற பயம், குழப்பம் ஒரு பக்கம்இருந்தாலும் முதல் முறையாக அரசு சம்பளம் வாங்கப் போகும் சந்தோஷம், பரவசம் அவர்களிடையேஇருக்கத்தான் செய்கிறது.

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும்போதெல்லாம், 31ம் தேதி சம்பளமாமே என்று புன்னகையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

சிலருக்கு பாதிச்சம்பளமே கிடைக்கும் நிலை உள்ளது. காரணம், பாதி நாளில்தான் அவர்கள் வேலைக்குச்சேர்ந்தார்கள்.

இருப்பினும் எவ்வளவு கிடைத்தாலும் பரவாயில்லை. நிம்மதியாக வேலை பார்க்கும் சூழ்நிலையை அரசுஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதற்காக எந்தத் தியாகத்தை வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறுகிறார்கள் அந்த தற்காலிக ஊழியர்கள்.

இதற்கு முன்பு வேலை பார்த்து வந்த தனியார் வேலையை விட இது எவ்வளவோ நிம்மதியாகவும், திருப்தியாகவும்உள்ளதாக பல ஊழியர்கள் கூறுகிறார்கள்.

சம்பளத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நிச்சயம் முன்பு பார்த்து வந்த தனியார் வேலையை விட இங்குஅதிக சம்பளம்தான் கொடுக்கிறார்கள் என்று அவர்கள் சந்தோஷத்துடன் கூறுகிறார்கள்.

மொத்தத்தில் முதல் சம்பளத்திற்காக ஆவலுடன் காத்துள்ளனர் இந்த தற்காலிக ஊழியர்கள். இவர்களுக்குமாதத்திற்கு ரூ. 4500 தொகுப்பூதியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பளம் விரைவில் ரூ. 6000 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X