For Daily Alerts
Just In
மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: பீதியில் கிராமங்கள்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து வாழைஉள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோப்பநாரி காட்டுப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர்மற்றும் உணவுக்காக காட்டில் வசிக்கும் மிருகங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.
குறிப்பாக, யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாழைத் தோட்டம், நெல் உள்ளிட்ட பயிர்களைநாசப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டுக்கு வைக்கும் புண்ணாக்கைக்கூட யானைகள் தின்று விடுவதாக விவசாயிகள் சோகத்துடன் கூறுகிறார்கள்.


