அசாத்திய துணிச்சல்காரர் ஜெயலலிதா: மோடி பாராட்டு
கோவை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அசாத்திய துணிச்சல்காரர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதைமிகவும் பகிரங்கமாக ஆதரித்துள்ளதை மனதார பாராட்டுகிறேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடிகூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ள ரத யாத்திரையையொட்டி, கோவை வ.உ.சி. பூங்காமைதானத்தில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா என்னைவிட வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவர். அயோத்தியில் ராமர் கோவில்கட்டும் விவகாரத்தில் மிகவும் தைரியமாகவும், பயமின்றியும் கருத்து தெரிவித்துள்ளதை நிான் பாராட்டுகிறேன்.அவர் அசாத்திய துணிச்சல்காரர்.
தமிழகத்தில் யாருடன் கூட்டு சேர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தகுதியும், திறமையும் தமிழக பா.ஜ.க.நிர்வாகிகளிடம் உண்டு. தகுந்த சமயத்தில் தங்களது கூட்டாளியை அவர்கள் தேர்வு செய்வார்கள்.
கோவைக்கு நான் வருவதை பெரிதுபடுத்துகிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம்நான் பயப்பட மாட்டேன்.
இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண்மணி இந்தியாவின் அத்தனை பகுதிகளுக்கும் தைரியமாகச் சென்று வருகிறார்.அப்படி இருக்கையில் நான் இந்த மண்ணின் மைந்தன், இந்தியத் தாயின் புதல்வன், நான் கோவை வருவதில்என்ன தவறு?
காஷ்மீர், பஞ்சாப் என தொடர்ந்து பாகிஸ்தான் தோல்விகளையேச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாகபுதுவகையான பயங்கரவாதத்தை அது மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக மக்கள் பொங்கியெழ வேண்டும்.
குஜராத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறேன். இதற்காக 10 நாள் குஜராத் விழாவைநடத்தவுள்ளோம். செப்டம்பர் 25ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள 60 லட்சம் குஜராத்திகளுக்கு நானே இ-மெயிலில் அழைப்புஅனுப்பியுள்ளேன். இந்த விழாவில் குஜராத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்மோடி.
பலத்த பாதுகாப்புக்கு இடையே அவரது பொதுக் கூட்டம் முடிவடைந்தது. மோடியின் வருகையால் கடந்த 4நாட்களாக கோவை நகரமே போலீசாரின் கோட்டையாக மாற்றப்பட்டது. இதனால் எந்தவிதமான பிரச்சனையும்இன்றி அவரது பயணம் முடிவடைந்தது.
காஞ்சிபுரம் சென்றார்:
இதையடுத்து நேற்றிரவு கோவையிலேயே தங்கிய அவர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம்புறப்பட்டார்.
அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் உலக அமைதிக்கான ஹோமத்தில் கலந்து கொண்டார்.பின்னர் காஞ்சி மடம் சென்று காஞ்சி சங்கராச்சாயார் ஜெயேந்திரர் மற்றும் இளையவர் விஜயேந்திர் ஆகியோரைசந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.
அயோத்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் இருவரும் பேசியதாகத் தெரிகிறது. பேச்சின்போது, ராமேஸ்வரததில்ஒரு பயணியர் இல்லம் கட்டித் தருமாறு மோடியிடம் சங்கராச்சாரியார் கோரிக்கை வைத்ததார். அதை மோடிஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
அதே போல குஜராத்தின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் காஞ்சி மடத்தின் கிளைகளை உருவாக்குமாறுசங்கராச்சாரியிடம் மோடி கோரிக்கை விடுத்தார். இது தவிர அகமதாபாத், சோம்நாத்பூர் ஆகிய இடங்களில்கட்டப்பட்டு வரும் கோவில்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
சந்திப்பு முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், ஆர்.எஸ்.எஸ்சின் தீவிர உறுப்பினராகஇருக்கும்போதே மோடியை எனக்குத் தெரியும் என்றார்.


