For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவிலில் அதிமுக-பா.ஜ.க. தொண்டர்கள் அடிதடி: நகரில் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

BJP cadres resort to road block

பா.ஜ.கவினரின் சாலை மறியல்
நாகர்கோவிலில் அதிமுக- பா.ஜ.கவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மத்திய பா.ஜ.க. அமைச்சர்,அதிமுக எம்.எல்.ஏவின் முன்னிலையில் அவர்களது ஆதரவாளர்கள் அடித்துக் கொண்டு உருண்டனர்.பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் உள்ள ராமசாமி அய்யர் பூங்கா சமீபத்தில் ரூ. 45 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

இதற்குமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 19 லட்சம் பணம்ஒதுக்கினார். அதே போல அதிமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தனது தொகுதி ம்ேபாட்டு நிதியில் இருந்து ரூ. 3 லட்சம்பணம் ஒதுக்கினார்.

இந்தப் புதிய பூங்காவின் திறப்பு விழா நேற்று நடைபெற இருந்தது. இதையடுத்து மத்திய அமைச்சரின் தொகுதிமேம்பாட்டு நிதியில் நீருற்று, கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டதாக ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது.

SP Arun with police team

பாதுகாப்புப் பணியில் எஸ்.பியும் போலீசாரும்
அதே போல எம்.எல்.ஏ. ஆஸ்டினின் நிதி ஒதுக்கீட்டில் சிறுவர் பூங்கா நுழைவாயில் வைக்கப்பட்டதாக இன்னொருகல்வெட்டும் வைக்கப்பட்டது.

இந்தப் பூங்காவின் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் தளவாய் சுந்தரம்,எம்.எல்.ஏ. ஆஸ்டின், கலெக்டர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.

இதையடுத்து அதிமுகவினர் பூங்காவைச் சுற்றி கட்சிக் கொடிகளைக் கட்டினர். முதல்வர் ஜெயலலிதாவின்கட்-அவுட்களை வைத்து மற்றும் போஸ்டர்களை ஒட்டினர்.

இந் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. ஆஸ்டினின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திடீரென மாயமானது. யாரோஅதை பெயர்த்து எடுத்துச் சென்றிருந்தனர். இதை பா.ஜ.கவினர் தான் செய்திருக்க வேண்டும் என அதிமுகவினர்குற்றம் சாட்டினர்.

இதையடுத்து எம்.எல்.ஏ. இன்னொரு கல்வெட்டைத் தயார் செய்து கொண்டு வந்து வைத்தார். அந்தக் கல்வெட்டசுவரில் பதிக்க அதிமுக முயன்றபோது அதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எங்க அமைச்சர் தான் நிறைய பணம் ஒதுக்கினார், ஆனால், வெறும் 3 லட்சத்தை தந்துவிட்டு கல்வெட்டு கேக்குதாஎன பா.ஜ.கவினர் கேட்க, சூடாகிப் போன அதிமுகவினர் அவர்களை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து இருகட்சிகளின் தொண்டர்களும் அங்கு குவிந்து ஒருவருக்கு எதிராக ஒருவர் கோஷம் போட்டனர்.

இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அதிமுகவினருக்கு எதிராக பா.ஜ.கவினர் சாலை மறியல் செய்ய,போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பா.ஜ.கவினரை தூக்கி சாலையோரத்தில்எறிந்தனர்.

இதையடுத்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அங்கு வந்தார். எம்.எல்.ஏ. ஆஸ்டினும் அங்கு வந்தார்.

இந் நிலையில் பா.ஜ.கவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஆரம்பித்தது. இரு தரப்பினரும்ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

Collector LAkkani speaking to MLA Astin and minister Radhakrishnan

ஆஸ்டின் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணனுடன் பேசும் கலெக்டர் லக்கானி
இதில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு முகம்உடைந்து ரத்தம் கொட்டியது.

தங்கள் கட்சியினர் அடித்துக் கொள்வதை ராதாகிருஷ்ணனும் ஆஸ்டினும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுநின்றனர்.

உடனே கலெக்டர் லக்கானிக்கு தகவல் பறக்க அவர் எஸ்.பி அருண் தலைமையிலான பெரும் படையுடன் வந்தார்.போலீசார் தலையிட்டு இரு கட்சியினரையும் விலக்கி விட்டனர். ஆயுதப் படையினருகும் வரவழைக்கப்பட்டுஅங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.

பூங்காவை மூடிவிட கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆஸ்டினுடன் கலெக்டர்தனித்தனியே பேச்சு நடத்தினார்.

கல்வெட்டை வைக்க விடாவிட்டால் பூங்காவைத் திறக்க விட மாட்டேன் என எம்.எல்.ஏ. கூறினார்.

ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனோ, அதிமுகவினர் தில்லுமுல்லு செய்கின்றனர். இரண்டு பேர் சேர்ந்து எப்படிநுழைவு வாயிலுக்கு நிதி ஒதுக்க முடியும். அது என் நிதியில் கட்டப்பட்டது. இதனால் நுழைவு வாயிலில் ஆஸ்டினின்கல்வெட்டை வைக்க விட மாட்டேன் என்றார்.

குழப்பிப் போன கலெக்டர் இரு கல்வெட்டுக்களையும் எடுத்துவிட்டு பூங்காவைத் திறக்கப் போவதாகஅறிவித்தார். அதன்படியே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூங்கா திறக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X