காங். அலுவலகத்தில் அடிதடி: வாசன் கோஷ்டி தலைவரின் சட்டை கிழிப்பு
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டிகளுக்கு இடையேபயங்கர மோதல் மூண்டது. இதில் ஒருவரது வேட்டி, சட்டை கிழிக்கப்பட்டது.
வட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் வண்ணாரப்பேட்டை பகுதியில் உடற் பயிற்சிக் கூடம்தொடங்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லப்பன் அழைக்கப்படவில்லை என்றுகூறப்படுகிறது. இவர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்.
கோபமடைந்த அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு தனது கோஷ்டியுடன் வந்தார். தலைவரான என்னை ஏன்கூப்பிடவில்லை, என்னைக் கூப்பிடாமல் எப்படி விழா நடத்தலாம் என்று இளங்கோவனின் ஆதரவாளர்களிடம்ஆவேசமாக கேட்டு வாதிட்டார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இளங்கோவன்ஆதரவாளர்கள், செல்லப்பனை உடனே வெளியேறுமாறு கூறினர்.
இதைத் தொடர்ந்து அடிதடி ஏற்பட்டது. இதில் செல்லப்பனின் சட்டை கிழிக்கப்பட்டது. அவருடன்வந்தவர்களுக்கும் அடி-உதை விழுந்தது. இதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.


