For Daily Alerts
Just In
சோ.பா, இளங்கோவன் இன்று டெல்லி பயணம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன்விவாதிப்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர்இளங்கோவன், பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இன்று டெல்லி செல்கிறார்கள்.
டெல்லி செல்லும் இவர்கள் சோனியாவை மட்டுமின்றி, காங்கிரஸ் பொதுச் செயலாலர்கமல்நாத்தையும் சந்தித்து அடுத்த 6 மாதத்திற்கான தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள்குறித்து விவாதிப்பார்கள்.
சத்திய மூர்த்தி பவனில் நேற்றும், நேற்று முன்தினம் நடந்த கோஷ்டி மோதல்கள் குறித்தும்,அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் கட்சி மேலிடத்திடம் தெரிவிக்கப்படும் என்றுதெரிகிறது.
சோ.பா, இளங்கோவனின் டெல்லி பயணம் சாதாரணமானதுதான் என்றும், இதில் விசேஷம்ஏதுமில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.


