6,072 பேரைத் தவிர மற்றவர்களை பணியில் சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரையும் பணியில் சேர்க்க தமிழக அரசுக்குஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ததை எதிர்த்து திமுக தொழிற்சங்கம் உள்ளிட்டவர்கள்உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்று காலை இந்த வழக்கு நீதிபதிகள் ஷா மற்றும் ஏ.ஆர். லட்சுமணன் முன்னிலையில்,மீண்டும் விசாரணைக்குவந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால், டிஸ்மிஸ்செய்யப்பட்டவர்களில் 14,526 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க முடியாது,இதில் 6,072 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 14,526 ஊழியர்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 6,072 பேர் தவிரமற்றவர்களுக்கு உடனே வேலை தர வேண்டும்.
இதில் வன்முறையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 3,323 பேர் மீது விசாரணை நடத்தலாம். அதேசமயம்,2,749 அதிகாரிகளின் டிஸ்மிஸ் உத்தரவுகளை, சஸ்பெண்ட் உத்தரவுகளாக மாற்ற வேண்டும். மீதமுள்ள 8,454ஊழியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6,072 பேர் மீதான புகார்களை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3நீதிபதிகளை கொண்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் இந்த விசாரணையை முடித்துஅரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
3 நீதிபதிகளை 7 நாட்களுக்குள் சென்னை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும். ஒரு மாதத்தில் இவர்கள் தங்கள்விசாரணையை முடிக்க வேண்டும், இந்த நீதிபதிகளுக்கு இதற்காக ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டும்.விசாரணையை டெஸ்மா சட்டப்பட்டி நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


