சோ.பா., இளங்கோவன் டெல்லி சென்றனர்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் நேற்று மாலைடெல்லி புறப்பட்டுச் சென்றனர். கோஷ்டி மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ்தலைமையுடன் அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கோஷ்டிப் பூசல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சி அலுவலகமானசத்தியமூர்த்தி பவன் வளாகத்திலேயே அடிதடி நடந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் வெறுத்துப்போயுள்ளனர்.
இந்த நிலையில் சோ.பாவும், இளங்கோவனும் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். விமான நிலையத்தில்இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக பொதுச் செயலாளர்கமல்நாத்துடன் விவாதிக்க செல்கிறோம்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாகவும் விவாதிப்போம். நாடாளுமன்றத் தேர்தலோடு,தமிழக சட்டசபையையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்தினால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.
இந்த விஷயங்கள் குறித்து மட்டுமல்லாது, கோஷ்டிப் பூசல் தொடர்பாகவும் முக்கியமாக விவாதிப்பார்கள் என்றுதெரிகிறது. சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.


