ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் அதிமுக தொண்டர்
சென்னை:
சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்அதிமுக தொண்டர் ஒருவர்.
சென்னை கே.கே.நகரில் கம்ப்யூட்டர் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் துரை கவுண்டர். இவர் தீவிர அதிமுகதொண்டர். எம்.ஜி.ஆர் மீது தீவிர பக்தியுடன் இருக்கும் துரை கவுண்டர் தற்போது ஜெயலலிதாவுக்குகோவில்கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
குன்றத்தூர் முருகன் கோவில் மலையடிவாரத்தில் ஆதி சக்தி அன்னை திருக்கோவில் என்ற பெரியல்ஜெயலலிதாவுக்கு கோவில் கட்ட தீர்மானித்துள்ள இவர் அதற்கான பொருத்தமான இடத்தைத் தேடி வருகிறார்இந்த தீவிர பக்தர்.
ஜெயலலிதாவுக்கு ஏன் கோவில் கட்டுகிறீர்கள் என்று இவரிடம் கேட்டால், ஏன் கட்டக் கூடாது. அவரைகடவுளாகத்தான் அதிமுகவினர் பார்க்கிறார்கள். அவரது துணிச்சல், தைரியம் உறுதி, ஏழைகள், வறுமையில்வாடுபவர்கள் மீது அவர் காட்டும் பரிவு, கணிவு, உதவி செய்யும் உள்ளம் என கடவுளுக்குரிய அத்தனைஅம்சங்களும் அவரிடம் உண்டு. எனவேதான் கோவில் கட்டுகிறேன் என்று கூறுகிறார்.
கோவில் கட்டி முடிக்கப்படும் வரை தனது வீட்டிலேயே 2 அடி உயர ஜெயலலிதா சிலையை வைத்து வணங்கிவருகிறார், பூஜையும் செய்கிறார். கோவில் கட்டிய பின் ஆறு கால பூஜை, அபிஷேகம் என வழக்கமானகோவில்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும் என்று பய பக்தியுடன் கூறுகிறார் துரைகவுண்டர்.
ஞாயிற்றுக்கிழமை இவரது வீட்டில் இந்த சிலை "பிரதிஷ்டை" செய்யப்பட்டது. அன்று முதல் சுற்று வட்டார அதிமுகதொண்டர்கள் ஏராளமான பேர் வந்து வணங்கிச் செல்கிறார்களாம்.
முதலில் தலைமைச் செயலக வளாகத்தில் இந்த சிலையைை வைக்க நினைத்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளாராம்.
ஆனால் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று அதிகாரிகள் கூறி விடவே தனது வீட்டிலேயே வைத்து பூஜைசெய்து வருகிறார். அதுவும் எப்படி தெரியுமா?
பட்டனைத் தட்டினால் "அம்மனின்" தலையில் பால் கொட்டுகிறது, சந்தனம் கொட்டுகிறது, தேன் கொட்டுகிறது.அந்த வகையில் தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி சாதனங்களை வடிவமைத்துள்ளார் இந்தவித்தியாசமான "அம்மன் பக்தர்".
இந்தத் தீவிர பக்தன் "அம்மன் பக்தி" அதிமுகவினர் மத்தியில் இவருக்குப் பெரும் பெயரை ஈட்டித் தந்துள்ளது.


