தமிழகத்தில் சரிந்தது பெப்சி, கோக் விற்பனை
மதுரை:
மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பெப்சி, கோககோலா குளிர் பானங்களின் விற்பனை பெரும் அடியைசந்தித்துள்ளது.
பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களில் நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. மதுரைப் பகுதியில் பேரதிர்ச்சியாக அலை பரவியுள்ளது.
மதுரை மாநகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று முதல் பெப்சி மற்றும் கோலா போன்றவற்றின் 12 வகையானகுளிர்பானங்களின் விற்பனையும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதற்குப் பதிலாக உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
காளிமார்க் நிறுவனத்தின் பவண்டோ, ரூபி நிறுவனத்தான் குளிர்பானங்கள், பார்னர், மாப்பிள்ளை விநாயகர்குளிர்பானம் ஆகியவற்றின் விற்பனை ஒரே நாளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
இதை நிலை தான் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பல கடைகளில் பெப்சி, கோலா போன்றவற்றின் விலையை வியாபாரிகளே குறைத்து வைத்து விற்பனைசெய்து வருகின்றனர். இருக்கும் ஸ்டாக்கை விற்றுத் தள்ளிவிட்டு, இந்தப் பரபரப்பு அடங்கும் வரை பெப்சி,கோக்கை கடையில் வாங்கி வைப்பதில்லை என்ற முடிவு பல வர்த்தக சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
பெப்சி, கோக்கை விற்க வேண்டாம் என தமிழக வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையனும் தனது சங்கஉறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக விரைவில் தீர்மானமும் போடப்படும் என்றுதெரிகிறது.


