For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பெப்சி. கோக்குக்கு தடை வருமா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோககோலா மற்றும் பெப்சி பானங்களில் நச்சுப் பொருள்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால்அவற்றுக்குத் தடை விதிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

Center for science and environment என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்தது.

இந்தியாவில் குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரை சரியாக சுத்தம் செய்யாமல் இந்த இருசர்வதேச குளிர்பான நிறுவனங்களும் உபயோகித்து வருகின்றன.

மேலும் லின்டேன் போன்ற பூச்சு மருந்துகள் (pesticides) இந்த குளிர்பானங்களில் அடங்கியுள்ளன. இந்தஉண்மையைக் கண்டறிந்து வெளியில் சொன்ன ஆய்வு நிறுவனத்தின் மீது வழக்குப்போடப் போவாதாக பெப்சியும்கோக் நிறுவனமும் கூறியுள்ளன.

இதையடுத்து, மக்களுக்கு நச்சுப் பொருள்களுடன் குளிர்பானம் விற்ற இந்த இரு நிறுவனங்கள் மீதும் வழக்குப்போட Center for science and environment அமைப்பு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் கிளப்பப்பட்டதையடுத்து முதல் கட்டமாக நாடாளுமன்றகேண்டீனில் பெப்சிக்கும் கோக்குக்கும் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பெப்சிமற்றும் கோக்கை தரப் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கைலக்கழகத்தில் இந்த இரு நிறுவனங்களின் குளிர்பானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் இவற்றை விற்க தடை விதித்து துணை வேந்தர்பாலகுருசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் தமிழக அரசும் இந்த நிறுவனங்களின் குளிர்பானங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கஆரம்பித்துள்ளது. இந்த பானங்களில் உள்ள நச்சுப் பொருள்களின் அளவு குறித்து ஆராயுமாறு சுகாதாரத்துறைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் முடிவை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே உலக அளவில் தீவிரமான வர்த்தப் போட்டியில் மோதிக் கொள்ளும் பெப்சியும் கோக் நிறுவனமும்இப்போது கைகோர்த்துக் கொண்டுள்ளன. இரு நிறுவனங்களும் இணைந்து ஆங்காங்கே நிருபர் கூட்டங்களையும்விளக்கக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்ன நிறுவனத்தை முடக்கவும்முயன்று வருகின்றன.

மேலும் அரசியல்வாதிகளைப் பிடித்து அவர்களை தங்களுக்கு ஆதரவாகத் திருப்பும் முயற்சிகளும்ஆரம்பித்துவிட்டன.

பெப்சியும் கோககோலா நிறுவனமும் அமெரிக்காவில் தயாரித்து விற்று வரும் குளிர்பானங்களையும் இதே பொதுநல அமைப்பு சோதனையிட்டது. ஆனால், அதில் நச்சுப் பொருள்கள் ஏதும் இல்லை.

ஆனால், இந்தியாவில் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் 12 வகையான குளிர்பானங்களிலும் சுமார் 16 முதல் 36மடங்கு அதிகமாக இந்த நச்சுப் பொருள்கள் கலந்துள்ளன. இவற்றை நீண்ட நாள் பருகினால் புற்றுநோய்,நரம்புகள் பாதிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த பொது நல அமைப்பு கூறியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் விற்பனையாகும் மினரல் வாட்டர்களை இந்த அமைப்பு தான் சோதனையிட்டு, அதில்அளவுக்கு அதிகமான பாக்டீரியாக்களும், ரசாயனமும் கலந்திருப்பதை வெளியில் சொன்னது. அப்போது அந்தமினரல் வாட்டர் நிறுவனங்கள் அனைத்தும் இந்த அமைப்புக்கு எதிராக போர்க் கொடி தூக்கின.

ஆனால், மத்திய அரசு நடத்திய ஆய்வில் இந்த அமைப்பு சொன்னது உண்மை என்று தெரிய வந்ததால் பலமினரல் வாட்டர் நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இப்போது இந்த அமைப்பு சர்வதேச குளிர்பான நிறுவனங்களின் முகமூடியைக் கிழித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X