தேசிய தடை கோருகிறது பா.ம.க.
சென்னை:
தேசிய அளவில் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களின் குளிர்பானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நச்சுப் பொருள்கள் நிறைந்த இந்த பானங்களால் மக்களுக்கு கெடுதல் தான், மக்களின் உடல் நலத்தைக் கெடுத்துஅதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வரும் இந்த நிறுவனங்களை ஒழித்துக் கட்ட வேண்டும்.
இதனால் மத்திய அரசு இந்த இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். மாநில அரசுகள் விற்பனைலைசென்ஸ்களை உடனே ரத்து செய்ய வேண்டும்.
இவற்றுக்குப் பதிலாக நம் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் குளிர்பானங்களுக்கு ஊக்குவிப்புத் தர வேண்டும்.
இதே போல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கும் துணி சோப்புகள், உடலுக்குப் பயன்படுத்தும்சோப்புகளில் உள்ள ரசாயனங்களின் அளவு குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.
இதற்கிடையே கேரள அரசும் தனது நிகழ்ச்சிகளில் பெப்சி, கோக்கை வினியோகிக்கத் தடை விதித்துள்ளது. அரசுவிடுதிகள், ஓய்வு இல்லங்கள், அரசு நிகழ்ச்சிகளில் இந்த குளிர்பானங்கள் வழங்கப்படக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவ சேனைத் தொண்டர்களுக்குப் பயந்து பெரும்பாலான கடைகளில் இருந்து பெப்சி மற்றும்கோக் பாட்டில்களை தூக்கி மறைத்துவிட்டனர்.
தமிழகத்தைப் போலவே பல மாநில அரசுகளும் பெப்சி. கோக்கில் உள்ள ரசாயனங்களை அளவிடஉத்தரவிட்டுள்ளன.


