For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் கட்டிவரும் அணையை பார்வையிட்ட கேரள குழு

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்லிே:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரை என்ற இடத்தில் தமிழகம் கட்டி வரும் அடவி நைனார்கோவில் அணையை கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜேக்கப் தலைமையிலான குழுவினர்பார்வையிட்டனர்.

இந்த அணைக்கு, கேரள ஆறுகளிலிருந்து தண்ணீரை ரகசியாக தமிழகம் எடுத்து வருவதாக கேரளஅரசியல்வாதிகள் சிலர் புகார் கூறி வருகின்றனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜேக்கப் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர்மேக்கரைக்கு வந்தனர்.

அவர்களை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் வரவேற்று அழைத்துச் சென்று அணை குறித்தவிவரங்களை விளக்கினார். கட்டப்பட்டு வரும் அணைக்கட்டையும் சுற்றிக் காட்டினார்.

பின்னர் ஜேக்கப் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடவி நைனார் கோவில் அணையை முழுவதுமாக ஆராய்ந்துபார்த்தோம். இதுதொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்தார்.

இங்கு நாங்கள் பார்த்தது, தெரிந்து கொண்டதை வரும் 18ம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் நடக்கும்கூட்டத்தில் எடுத்துரைப்போம்.

தமிழக அரசிடமும் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுள்ளோம். அணைக்கு வரும் ஒரு கால்வாய் குறித்தவிவரங்களைக் கோரியுள்ளோம். இந்த கால்வாய், பம்பா-அச்சன்கோவில்- வைப்பாறு நதி நீர் இணைப்புத்திட்டத்தின் கீழ் வருகிறது.

ஏற்கனவே பம்பா-அச்சன்கோவில் நதிகளை, தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்க நாங்கள் எதிர்ப்புதெரிவித்து வருகிறோம்.

எனவே, இந்தக் கால்வாய் மூலம் எங்கள் நதிகளை தமிழகம் தனது நதியுடன் இணைக்கிறதோ என்ற சந்தேகம்எங்களுக்கு உள்ளது என்றார்.

பின்னர் ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் நிருபர்களிடம் கூறுகையில், எனது வேலையை நான் செய்துள்ளேன்.அணை குறித்த அத்தனை விவரங்களையும் கேரள குழுவினருக்கு விளக்கி விட்டேன் என்றார்.

கேரளக் குழுவினர் அணையைப் பார்வையிட்டபோது அணைத் திட்ட செயற்பொறியாளர் முத்தையா, மதுரைபிராந்திய பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் சங்கரநாராயணன் ஆகியோரும் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X