6,072 அரசு ஊழியர்கள் மீதான வழக்கு: 3 நீதிபதிகள் கமிட்டி அமைப்பு
சென்னை:
வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காவல் துறையினரால் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு மீண்டும் பணி வழங்கலாமா என்பது குறித்து விசாரிக்க 3ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஓய்வு பெற்ற நீதிபதிகளான மலைசுப்பிரமணியம், சம்பத், தங்கவேல்ஆகியோரைக் கொண்ட விசாரணைக் கமிட்டியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஇன்று அமைத்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களில் சுமார் 8,000 பேருக்கு வேலை வழங்கவும், எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்ட மற்ற 6,072 பேர் மீதான வழக்குகளை 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கமிட்டியைக் கொண்டுவிசாரிக்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகளை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு தலா ரூ. 50,000 ஊதியம் வழங்கவேண்டும் எனவும், இந்த நீதிபதிகள் கமிட்டி ஒரு மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேரை இந்த கமிட்டிக்கு நியமிக்குமாறு தலைமை நீதிபதிக்கு தமிழக அரசுகோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்த 3 நீதிபதிகளின் பெயர்களையும் தலைமை நீதிபதி இன்றுஅறிவித்தார்.
இக் குழு ஒரு மாதத்தில் விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கையை தாக்கல் செய்யும். மூன்றுநீதிபதிகளும் தலா 2,000 வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில்தான் 6,072 ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுமா, இல்லையா என்பது முடிவாகும்.


