For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் நிதி திரட்டலை முடக்க முயற்சி: திமுக புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க நிதி திரட்டும் முயற்சிகளை திமுக தலைவர் கருணாநிதிதீவிரப்படுத்தியுள்ளார். இந் நிலையில் தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 1 கோடி நிதி திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திரட்டப்படும் நிதியை தவணை முறையில் அறிவாலயத்தில் திமுகவினர் ஒப்படைத்து வருகின்றனர்.

மாஜி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், கட்சிப் பதவியை வைத்து வாழ்ந்தவர்கள், திமுக ஆட்சியில் லாபம் அடித்த காண்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள ஆகியோரிடம் இந்த நிதி திரப்படுகிறது.

கடைக்காரர்கள, பொது மக்களிடமும் நிதி திரட்டி வருகின்றனர் திமுகவினர். பல இடங்களில் கடைக்காரர்களைமிரட்டி நிதி கேட்பதாகவும் திமுகவினர் மீது புகார்கள் எழுந்துள்ளன. சென்னை தாம்பரத்தில் பால் பண்ணை ஒன்றில்நிதி திரட்டச் சென்ற திமுகவினருக்கும் பால் பண்ணை ஊழியர் சந்திரமோகன் என்பவருக்கும் இடையேவாக்குவாதம் எழுந்தது.

இதையடுத்து சந்திரமோகனை திமுகவைச் சேர்ந்த குறிஞ்சி சிவா என்பவர் தாக்கியுள்ளார். இதையடுத்து சிவா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், திமுக ஆட்சியில் இருந்தபோது நன்றாக அனுபவித்த திமுக தலைவர்கள் பலர் இப்போது நிதிதிரட்டும் விஷயத்தில் ஒதுங்கி வருவதாக அறிவாயலத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தேர்தல் நிதி திரட்டலை தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்கருணாநிதி.

சனிக்கிழமை தஞ்சாவூரில் தனது சுற்றுப் பயணத்தை கருணாநிதி தொடங்குகிறார். தஞ்சையைத் தொடர்ந்து திருச்சி,சென்னை, திருநெல்வேலி, பரமகுடி, மதுரை, திருவண்ணாமலை, திருப்பூர், சேலம் ஆகிய நகர்களுக்கு கருணாநிதிசெல்கிறார்.

கருணாநிதியின் வருகையை ஒட்டி நிதி திரட்டும் வேலையை முடுக்கிவிட்டுள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகிகள்சிறப்புப் பொதுக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இவற்றில் கருணாநிதி பங்கேற்கிறார். அப்போதுமேடையில் வைத்தே கருணாநிதியிடம் நிதி வழங்கப்படும்.

இதற்கிடையே ஜவுளி தொழிற்சாலைகள் நிறைந்த ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி தேர்தல் நிதி திரட்டுவதில் அதிக முனைப்பு காட்டி வந்ததாகத் தெரிகிறது. ஜவுளி அதிபர்களிடம் அவர்அதிகமான நிதி திரட்டிய நிலையில் தான் அவரது வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீசாரை விட்டு ரெய்ட்நடத்தப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா மீது திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X