For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக மாஜி அமைச்சர்களின் ரூ. 1.75 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம். எல்.ஏக்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.75கோடி அளவுக்கு வருமானத்தை மீறிய சொத்துக்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைபோலீஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து தமிழ லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.சுந்தரம்,முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர் கு.பிச்சாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனிமற்றும் வலங்கைமான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோமதி சீனிவாசன் (இப்போதைய பா.ஜ.க. உறுப்பினர்)ஆகியோர் தங்களுடையே வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளனர்.

நிலம், சொத்துக்கள் வாங்கியுள்ளனர். வங்கிகள், காப்பீட்டு கழகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடுசெய்துள்ளனர். ஆனால், அந்த ஆவணங்களை மறைத்து வைத்துள்ளார்கள் என்று நம்பத் தகுந்த தகவல்கிடைத்தது.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் என்.கே.கே.பெரியசாமிக்கு சொந்தமான 4 வீடுகளிலும், காஞ்சீபுரம்மாவட்டம் மற்றும் சென்னையில் கே.சுந்தரம் சம்பந்தப்பட்ட 4 இடங்களிலும், விருதுநகர் மாவட்டத்தில்தாமரைக்கனிக்கு சொந்தமான 4 வளாகங்களிலும், தஞ்சாவூர் மாவட்டம் நரியனூர் கிராமத்தில் கோமதிசீனிவாசனின் குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச் சோதனைகளின்போது நிலங்கள் பற்றிய ஆவணங்கள், வாகனங்கள், வங்கி கணக்குகள், காப்பீட்டுகழகங்களில் முதலீடு செய்தற்கான ஆவணங்கள், நகைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றதற்கான செலவுவிவரங்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

என்.கே.கே.பெரியசாமி, அமைச்சராக இருந்த காலத்தில் (1996 முதல் 2001 வரை) சுமார் ரூ.1.30 கோடி செலவுகள்செய்துள்ளார், சொத்துக்கள் வாங்கியுள்ளார்.

கே.சுந்தரம் அமைச்சராக இருந்த காலத்தில் சுமார் ரூ.55 லட்சத்திற்கு செலவுகள் செய்துள்ளதாகவும், சொத்துக்கள்வாங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

அதேபோல், தாமரைக்கனி, சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் (1996 முதல் 2001 வரை) சுமார் ரூ.70லட்சத்திற்கு செலவுகள் செய்துள்ளதாகவும், சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும் சந்தேகத்திற்குரிய சில சொத்துக்கள் வாங்கியது குறித்து புலன் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

முன்னாள் வீட்டு வசதி துறை அமைச்சர் பிச்சாண்டியின் தூண்டுதலின் பேரில், முன்னாள் கூட்டுறவு வீடு கட்டும்சங்கப் பதிவாளர் நல்லதம்பி மற்றும் காஞ்சீபுரம் வீடு கட்டும் சங்க அலுவலர்கள் 12 பேர் அதிக விலை கொடுத்துநிலத்தை வாங்கி அரசுக்கு ரூ. 1.87 கோடி நஷ்டம் ஏற்படுத்தினர்.

இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் அவரிடம் அதிகாரிகளாகஇருந்தவர்களுக்குத் தொடர்புடைய இடங்களிலும் நேற்று சோதனைகள் நடத்தப்பட்டன.

சென்னையில் 9 இடத்திலும், காஞ்சீபுரத்தில் 3 இடத்திலும், திருவண்ணாமலையில் 2 இடத்திலும், திண்டிவனத்தில் 1இடத்திலும் இச் சோதனைகள் நடந்தன.

சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X