இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு: மத்திய அரசுக்கு ஆதரவு குறித்து விவாதம்
சென்னை:
அதிமுகவின் முக்கிய செயற் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குஎதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதா அல்லதுஎதிர்த்து வாக்களிப்பதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமானஜெயலலிதா ஆலோசித்து முடிவெடுப்பார்.
ஏற்கனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்டுவிட்ட இந்த செயற் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ளஅதிமுகவின் தலைமையகத்தில் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், அனைவரும் நேற்றே சென்னையில் கூடிவிட்டனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இப்போது மத்தியஅரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் அது குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது.
பா.ஜ.கவுடன் நெருங்க அதிமுக முடிவு செய்துவிட்டதால் தீர்மானத்தை எதிர்க்கவே இக் கூட்டம் முடிவெடுக்கும்அல்லது நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு அதிமுக வரலாம்.
அதே போல கட்சியில் சரிவர செயல்படாத நிர்வாகிகளுக்கு இக் கூட்டத்தில் ஜெயலலிதா கடும் டோஸ் கொடுப்பார்என்று தெரிகிறது. கூட்டம் முடிந்த பின் அடுத்த சில தினங்களில் அதிமுக நிர்வாகிகளும் மாற்றப்படுவார்கள் எனஅந்தக் கட்சியினர் வட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.


