ஊழியர்கள் வழக்கு: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட சுமார் 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வழக்குகளை விசாரிக்க உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் கமிட்டி முன் வழக்கை நடத்த அரசு சார்பில் 3 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கறிஞர்கள் நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என அரசு ஊழியர்களின் வழக்கறிஞர்கள்கூறியுள்ளனர்.
6,072 டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வழக்குகளை விசாரிக்க,உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீதிபதிகள் குழு முன் அரசு சார்பில் வாதாட வெங்கட்ரமணி, கோவிந்தன் மற்றும் கந்தசாமி ஆகியோரைதமிழக அரசு நியமித்துள்ளது.
இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தவழக்கறிஞர்களான முகம்மது ரபி, ஹசன் பைசல் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக 3 நீதிபதிகளுக்கும் அவர்கள் அனுப்பியுள்ள மனுவில், தமிழக அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக அமைந்துள்ளது. இதுதவிர 3 நீதிபதிகள் குழுவின் செயல்பாடுகளில்தலையிடுவதாகவும் அமைந்துள்ளது.
நீதிபதிகள் குழுவில் வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை நியமிக்க அரசுக்கு உரிமையில்லை. வழக்குவிசாரணையைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த நியமனங்களை அரசு மேற்கொண்டுள்ளதுஎன்று அவர்கள் கூறியுள்ளனர்.


