For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கை அவமானம்: தேசியக் கொடி ஏற்றிய தலித் பஞ்சாயத்துத் தலைவருக்கு செருப்படி!!

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் சொட்டதட்டி என்ற கிராமத்தில் தேசியக் கொடியேற்றிய தலித் இனத்தைச் சேர்ந்தபஞ்சாயத்துத் தலைவரை உயர் ஜாதியினர் செருப்புகளால் அடித்து, உதைத்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று இச் சம்பவம் நடந்தது. ஆனால், அதை வெளியே தெரியவிடாமல் உயர் ஜாதியினரும்போலீசாரும் மறைக்க முயன்றனர். இப்போது தான் இந்த விவகாரம் மெள்ள வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.

சொட்டதட்டி பஞ்சாயத்துத் தலைவரான ராஜூ என்ற அந்த தலித் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊரில் உள்ளபள்ளியில் கொடியேற்றியபோது சுப்பையா என்பவரின் தலைமையில் அங்கு வந்த இன்னொரு ஜாதியைச்சேர்ந்தவர்கள் கண்டபடி திட்டினர்.

நீ எப்படிடா கொடி ஏத்தலாம் என்று கேட்டுக் கொண்டே, தேசியக் கொடிக்கு கீழே வைத்தே ராஜூவை செருப்பால்அடித்துள்ளனர். சிவகங்கை பகுதியில் பெரும்பாலாக உள்ள ஜாதியினர் இவர்கள்.

இதனால் இவர்களை எதிர்த்து ஏதும் செய்ய முடியாமல் அங்கிருந்த பிற தலித்களும் கூனிக் குறுகிப் போய் நிற்க,அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி விரட்டி விட்டுள்ளது அந்த ஜாதி வெறிக் கும்பல்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் தலித்கள் யாரும் புகார் தரவில்லை. ஆனால், இந்த விஷயம்போலீசாரின் காதுக்குச் சென்றதாகத் தெரிகிறது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். கோயம்புத்தூரில் இன்று அவர்நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது சொட்டதட்டியில் செருப்பால் தாக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் ராஜூவும் உடனிருந்தார்.

இது குறித்து ராஜூ கூறுகையில்,

நான் கொடியேத்திக்கிட்டு இருந்தபோது, சுப்பையாவும் அவங்க ஆட்களும் வந்து வெளியில் பேச முடியாதவார்த்தைகளால் திட்டினாங்க. நான் பதிலுக்கு, ஐயா இன்னிக்கு சுதந்திர தினம். பள்ளிக் கூடத்துல கொடியேத்தனும்.பஞ்சாயத்துத் தலைவர் என்கிற முறையில நான் இதை ஏத்துறேன். மத்தபடி நான் யாருக்கும் எந்த சவாலும்விடலைன்னு சொன்னேன்.

எங்களையே எதிர்த்து பேசுறியா, நீ என்ன பெரிய தலைவனானுன்னு கேட்டுக்கிட்டே செருப்புகளால அடிக்கஆரம்பிச்சுட்டாங்க. இதைப் பார்த்த மத்த தலித் குடும்பங்கள் கூனிக் குறுகிப் போச்சு. தேசியக் கொடிக்கு கீழே இந்தமாதிரி நடந்துக்கிட்டாங்க. அந்த கொடியோட புனிதத்தையும் கெடுத்திட்டாங்க என்றார்.

இதன் பின்னர் கிருஷ்ணசாமி கூறுகையில்,

இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட தலித்துக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. தேசியக் கொடிக்கும், இந்த தேசத்துக்கும்நேர்ந்த அவமானம். போலீசார் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.

இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட வேண்டும். முழு விசாரணை நடத்தி தவறு செய்தசுப்பையாவையும் அவரது கும்பலையும் கைது செய்ய வேண்டும். அதே போல கடமையைச் செய்யத் தவறியஅதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற மாவட்டக் கலெக்டர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட மூத்த போலீஸ்அதிகாரிகளிடம் தமிழக அரசு தனிக் குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தலித்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டன. சுப்பையாவையும்அவரது கும்பலையும் கைது செய்யக் கோரி வரும் அக்டோபர் 2ம் தேதி சென்னை கவனர்னர் மாளிகை முன்ஆயிரக்கணக்கான தலித்கள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தலித் ஒருவர் கொடியேற்றியதால் ஆத்திரமடைந்துள்ள உயர் ஜாதியினர் தலித்களை தண்டிக்கும் வகையில்சிலநடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன்படி ஊர் பொதுக் கிணற்றில் இருந்து தலித்கள் தங்கள்நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இப் பகுதி உயர் ஜாதியினர் வெட்டு குத்துக்கு பெயர் போனவர்கள் என்பதால் உயிருக்கு அஞ்சி இது குறித்துப்பேசவே பயப்படுகின்றனர் சொட்டதட்டி தலித் மக்கள். இதையே சாக்காக வைத்து விஷயத்தை அப்படியே மூடிமறைக்க மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் முயன்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X