For Daily Alerts
Just In
ஓய்வு பெறும் வயது 56 ஆகிறது
சென்னை:
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 56ஆகக் குறைப்பதில் தமிழக அரசு மிகத் தீவிரமாகஉள்ளது.
இந்த உத்தரவு அமலாக்கப்பட்டால் இந்த ஆண்டிலேயே சுமார் 50,000 பேர் கட்டாய ஓய்வு பெற வேண்டிய நிலைஏற்படும்.
இவ்வாறு ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக் கொடை (செட்டில்மெண்ட்) வழங்க அரசுக்கு ரூ.2,400 கோடி தேவைப்படும் என்று தெரிகிறது. இவ்வளவு தொகை கையில் இல்லாததால் தேசியமயமாக்கப்பட்டவங்கிகளிடம் கடன் கேட்டு மனு செய்துள்ளது தமிழக அரசு.
இந்தக் கடனுக்கு ஈடாக தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை அடமானம் வைக்கவும் அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிடம் தமிழக அரசு இந்தக் கடனைக் கோரியுள்ளது.


