தலைமைச் செயலக ஊழியர்கள் விரைவில் இடமாற்றம் !
சென்னை:
தலைமைச் செயலக பணிக்கு ஊழியர்களை அனுப்புமாறு சென்னை நகரில் உள்ள பல்வேறு துறைகளின்அலுவலகத் தலைவர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து 6,072 ஊழியர்களுக்கு மீண்டும் பணிவழங்கப்படவில்லை. இவர்களில் 2,769 பேர் தலைமைச் செயலக ஊழியர்கள். இவர்களில் 2,215 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர், 554 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
3 நீதிபதிகள் கொண்ட குழுவின் விசாரணைக்குப் பிறகே இவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா, கிடைக்காதாஎன்பது தெரிய வரும்.
இந் நிலையில், தலைமைச் செயலக ஊழியர்களை பிற மாநில அரசுப் பணிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவுக்குஅரசு வந்துள்ளது. இதுவரை தலைமைச் செயலக ஊழியர்களுக்குத் தனிச் சலுகை தரப்பட்டு அவர்கள் ஓய்வுபெறும் வரை அங்கேயே பணிபுரிய வசதி இருந்தது.
ஆனால், இனி அவர்களையும் பிற அரசுப் பணி ஊழியர்களின் கணக்கில் சேர்த்து, நினைத்தபோது நினைத்தஇடத்துக்கு டிரான்ஸ்பர் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தலைமைச் செயலக ஊழியர்களுக்கானசட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் மொத்தம் 5,116 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 2,347 பேர் மட்டுமேஸ்டிரைக்கிற்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர 1,000 தற்காலிக ஊழியர்களும்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது 2347 ஊழியர்களில் முக்கால்வாசி ஊழியர்களை பிற அலுவலகங்களுக்கு அனுப்ப அரசு முடிவுசெய்துள்ளது.
முதல் கட்டமாக, சென்னை நகரில் உள்ள பல்வேறு அரசு அலுவலங்களின் தலைவர்களுக்கும் அரசு ஒருசுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ஒவ்வொரு அலுவலகமும் 500 ஊழியர்களுக்குக் குறையாமல் ஊழியர்கள் பட்டியலை அனுப்பிவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களின் சர்வீஸ் 15 வருடத்திற்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.
கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், டைப்பிஸ்டுகள் என பல்வேறு வகையான ஊழியர்களை தலைமைச்செயலக பணியில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர, ஒவ்வொரு துறையிலிருந்தும் 30 ஊழியர்களைஒரு மாத தற்காலிகப் பணிக்கு தலைமைச் செயலகத்திற்குப் பரிந்துரைக்குமாறும் துறைத் தலைவர்களை அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
ஊழியர்களின் பட்டியல் அரசின் கைக்கு வந்தவுடன், தலைமைச் செயலகத்திற்குத் தேவைப்படும் ஊழியர்களைஅரசு தேர்வு செய்து அங்கு அமர்த்தும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து தலைமைச் செயலக ஊழியர்கள் பிறஅரசு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.


