வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் தொடர் மழை
சென்னை:
வங்கக் கடலில் ஆந்திராவுக்கும், ஒரிசாவுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கன மழை பெய்கிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்குநீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டாமாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அடை மழை பெய்கிறது.
இந் நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்கூறியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை பெய்யும்.
அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 7 செ.மீட்டரும், சிதம்பரம், பாண்டிச்சேயில் தலா 3 செ.மீயும் மழையும்பெய்துள்ளது.


