பசு வதை தடுப்புச் சட்டத்திற்கு வைகோவும் எதிர்ப்பு
சென்னை :
நாடாளுமன்றத்தில் பசு வதைத் தடுப்புச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை மதிமுக ஆதக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து திமுக. பா.ம.க. போன்ற தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது மதிமுக எம்.பிக்களும் இதற்கு எதிராகக்குரல் கொடுத்தனர்.
இந் நிலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அனைத்து உயிர்களையும் ஒரே மாதிரியாகவே மதிக்க வேண்டும். அனைத்து உயினங்களையும் கொல்லக் கூடாது,என்று சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் மதிப்போம், அதை ஆதரிப்போம். ஆனால், பசுக்களை மட்டும்வதைக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் அதை ஏற்க மாட்டோம், ஆதரிக்கவும் மாட்டோம்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மத்திய அரசு, அனைத்து மதத்தினரின்உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.
கடந்த முறை ராஜ்யசபா தேர்தலின்போது வாக்களிப்பதற்காக நான் டெல்லி கொண்டு செல்லப்பட்டபோது,போலீஸாரால் அவமானப்படுத்தப்பட்டேன். அதேபோன்ற நிலைதான் தற்போதும் ஏற்படும் என்பதால்தான்,காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நிம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளசெல்லவில்லை என்றார் வைகோ.


