For Daily Alerts
Just In
ரூ. 3.5 கோடி அபின் பறிமுதல்: 2 பேர் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற இடத்தில் ரூ. 3.5 கோடி மதிப்புள்ள அபின் போதைப்பொருளுடன் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரகோசமங்கையில், 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் திரிந்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்துசென்ற போலீஸார், கூப்பிட்டு விசாத்தனர்.
அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் அபின் போதைப் பொருள் இருந்தது. இதையடுத்துசிராஜூதின், முஜிபுர் ரஹ்மான் என்ற அந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இருவரும் வைத்திருந்த அபின் ரூ. 3.5 கோடி மதிப்புள்ளது. இருவரும் பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


