மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன் மீது தமிழக அரசு இன்னொரு வழக்கு
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் மீது மேலும் ஒரு வழக்கை தமிழக அரசுதொடர்ந்துள்ளது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தூண்டியதாகக் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்செயலாளர் வரதராஜன் ஆகியோர் மீது ஏற்கனவே எஸ்மா சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது.
இந் நிலையில் வரதராஜன் மீது அவதூறு வழக்கு ஒன்றையும் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் ஓய்வில் இருந்தார். அப்போது, சென்னை மாநகராட்சிஅதிகாரிகளை அங்கு வரவழைத்து மேயர் பதவியிலிருந்து ஸ்டாலினை நீக்குவது தொடர்பாக ஆலோசனைநடத்தியதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தி அரசுக்கு அவப் பெயரை உருவாக்கிவிட்டதாகக் கூறி அதன் வெளியீட்டாளரான வரதராஜன் மீதுதமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இளங்கோவன், தாமரைக்கனி போன்றவர்கள் மீது பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இப்போது வரதராஜனும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளார்.


