விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் கோஷ்டி மோதல்: பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் கைது
பாண்டிச்சேரி:
மோதலில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டு கோஷ்டிகளைச்சேர்ந்த 9 பேரை புதுவை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதன் மூலம் பெரும் வன்முறைதவிர்க்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக இருப்பவர் ஆனந்த். இவர் தனதுஆதரவாளர்கள் நான்கு பேரோடு பட்டாக் கத்திகள், அரிவாள்கள், நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்டஆயுதங்களுடன் புதுவை கிளம்பினார்.
அங்கு விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் விமல்ராஜ் என்பவரைத் தாக்குவதற்காக இவர்கள் சென்றனர்.
இவர்கள் வருவதை அறிந்த விமல்ராஜ் கோஷ்டியைச் சேர்ந்த 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் புதுவை பஸ்நிலையம் அருகே வாகனம் ஒன்றில் காத்திருந்தனர். பஸ் நிலையத்திற்கு வரும் ஆனந்த் குழுவினரை அங்கேயைவைத்துத் தாக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதுகுறித்து புதுவை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பஸ் நிலையப் பகுதியில்காத்திருந்த விமல்ராஜ் மற்றும் நான்கு பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அதேபோல, புதுவைக்கு வந்து கொண்டிருந்த ஆனந்த் மற்றும் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இரு தரப்பினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. போலீசாரின் துரித நடவடிக்கையின்மூலம் பெரும் வன்முறை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளதாக புதுவை மாநில முதுநிலை காவல்துறைக்கண்காணிப்பாளர் ஆனந்த் மோகன் கூறியுள்ளார்.


