For Quick Alerts
For Daily Alerts
Just In
நெல்லையில் சாக்கடையில் விழுந்து யானை பரிதாப சாவு
திருநெல்வேலி:
திருநெல்வேலியில், தர்காவுக்குச் சொந்தமான யானை பெரிய சாக்கடைக் கால்வாயில் தவறி விழுந்து பரிதாபமாகஇறந்தது.
நெல்லை, பொட்டல்புதூர் பகுதியில் உள்ள தர்காவைச் சேர்ந்த பெண் யானை மீனாட்சி. 35 வயதாகும்மீனாட்சியை அதன் பாகனான அபுபக்கர் என்பவர் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
பேட்டை அருகே கண்டியப்பே சாலையில் வந்தபோது, சாலையோரம் இருந்த மரத்தின் கிளையை அந்த யானைமுறிக்க முயன்றது. அப்போது அருகே இருந்த பெரிய சாக்கடையில் அந்த யானை தவறி விழுந்தது.
யானையை மீட்க பாகனும், சாலையில் சென்றவர்களும் தீவிரமாக முயன்றனர். ஆனால் மீட்க முடியவில்லை.இதையடுத்து தீயணைப்புப் படைக்குத் தகவல் போனது. ஆனால், மீட்பு நடவடிக்கை துவங்குவதற்கு முன்னதாகவேசாக்கடையில் அந்த யானை மூழ்கி மூச்சுத் திணறி இறந்து போனது.


