மழை நீர் சேமிப்பு: அரசின் நெருக்குதலுக்கு எதிராக வழக்கு- அக்டோபர் 10 வரை கெடு நீட்டிப்பு
சென்னை:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மழை நீர் சேமிப்பு வடிகால் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து வடிகால் அமைக்காத வீடுகள், கட்டடங்களில் குடிநீர்இணைப்பையோ, மின்சார இணைப்பையோ துண்டிக்க மாட்டோம் என நீதிமன்றத்திடம் தமிழக அரசுஉறுதிமொழி அளித்துள்ளது.
வாய்ஸ் என்ற நுகர்வோர் அமைப்பின் சார்பில் பிரபல வழக்கறிஞர் விஜயன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வீடுகள், கட்டடங்களில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்,இல்லாவிட்டால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சிகூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள நிலப் பகுதியில் 40 சதவீத பகுதி அரசு ஊராட்சிகள் வசம் உள்ளது. இந்த 40 சதவீதப் பகுதியில்ஊராட்சிகளுக்குச் சொந்தமான சாலைகள், நிலப் பகுதிகள் உள்ளன. மழைக் காலத்தின்போது இந்த சாலைகளில்வெள்ளம்போல நீர் ஓடி வீணாகிறது.
ஆனால், இந்த மழை நீரை சேமிக்க மழை நீர் சேமிப்பு சட்டத்தில் இடம் இல்லை. இதனால், இந்த சாலைகளையும்மழை நீர் வடிகால் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.
பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுவதை அரசு தடுக்க வேண்டும். இந்தக் கட்டடங்களின் நிலப்பகுதி மிகவும்குறைவானதாக இருக்கிறது. ஆனால், அந்த நிலத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதனால் நீரின் தேவையும் அடுக்குமாடிகளில் மிக அதிகமாக உள்ளது.
31ம் தேதிக்குள் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு பொது மக்களை நெருக்குவதால்,தேவையில்லாத விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.
மீட்டர் ரூ. 25க்கு விற்ற பிளாஸ்டிக் குழாய்கள், இப்போது ரூ. 70 க்கு விற்கப்படுகிறது. இது தவிர மணல், செங்கல்ஆகியவற்றின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. வேலைக்கான கூலியும் அதிகம் கொடுக்கவேண்டியுள்ளது. பொருட்கள் கிடைப்பது தட்டுப்பாடாகி விட்டது.
இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், மழை நீர் வடிகால் வசதியை செய்யாவிட்டால் குடிநீர்இணைப்பை துண்டிப்பேன் என்று கூறுவதுதான். காற்று, தண்ணீர், மின்சாரம் ஆகியவை தனி மனித உரிமையாகும்.
வேறு ஒரு செயலை செய்வதற்காக, இவற்றை தர மாட்டேன் என்று தமிழக அரசு கூறுவது சட்ட விரோதமானது.இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார் விஜயன்.
இந்த மனுவில் மீது இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதிகுலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் கூறுகையில்,
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வடிகால் அமைக்காவிட்டால் உடனடியாக கட்டடங்களின் குடிநீர் இணைப்பையோஅல்லது மின்சார இணைப்பையோ சென்னை மாநகராட்சி துண்டிக்காது. வடிகால்களை மாநகராட்சியினரேஅமைப்பார்கள். பின்னர் அதற்கான செலவை அந்தக் கட்டட உரிமையாளர்களிடம் இருந்து வசூலிப்பார்கள்.
அதே நேரத்தில் அக்டோபர் 10ம் தேதி வரை மழை நீர் சேமிப்பு வடிகால் அமைக்காத வீடுகளில் குடிநீர் இணைப்புதுண்டிக்கப்படும் என்றார்இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர் விஜயன் கடந்த அதிமுக ஆட்சியின்போது, அரசுக்கு எதிராகவழக்குத் தொடர்ந்ததால், மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு, நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.


