For Daily Alerts
Just In
மழை நீர் வடிகாலுக்காக 2 லட்சம் பேர் மனித சங்கிலி
ஈரோடு:
மழை நீர் சேமிப்பு வடிகால் வசதியை ஏற்படுத்த வலியுறுத்தி 2. 5 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டபிரமாண்டமான மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் இந்த மனிதச் சங்கிலி ஆரம்பித்தது. அமைச்சர் பி.சி.ராமசாமி இதைத்தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
சித்தோட்டில் தொடங்கி, சத்தியமங்கலம், காங்கேயம் வழியாக தாராபுரம் வரை இந்த மனிதச் சங்கிலி நீண்டது.சுமார் 2.5 லட்சம் மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர்.
இந்த மனிதச் சங்கிலி பொது மக்களை வெகுவாக கவர்ந்தது.


