இறைச்சி கடை அருகே திடீரென சாமி சிலைகள் பிரதிஷ்டை: கரூரில் பதற்றம்- போலீசார் குவிப்பு
கரூர்:
கரூர் அருகே பஞ்சமாதேவி என்ற கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் திடீர் என்று நான்கு சாமி சிலைகள்வைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீஸார் அங்குகுவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமம். இங்குள்ள சுடுகாட்டுக்கு அருகே உள்ள நிலத்தில் இன்னொருமதத்தைச் சேர்ந்தவர் இறைச்சிக் கடை வைத்திருந்தார். இந் நிலையில் நேற்றிரவு திடீரென இறைச்சிக் கடைக்குஅருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் நான்கு சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
அரை அடிக்கு மேடை அமைத்து இந்த சிலைகள் நிறுவப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து இறைச்சிக் கடைக்காரர் சார்ந்த சமூகத்தினர் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பெரும் பதற்றம்ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சந்தீப் மித்தல் உள்ளிட்ட அதிகாகள் அங்குவிரைந்தனர்.
வஜ்ரா கலவரத் தடுப்புப் போலீஸ் பிரிவும் அங்கு விரைந்தது. ஆயுதம் தாங்கிய போலீஸார் கிராமத்தில்குவிக்கப்பட்டனர்.
கரூர் தாசில்தார் சுப்ரமணியன் முன்னிலையில் சமரசப் பேச்சுக்கள் நடந்தன. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்தசாமி சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.


