மதுரை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை திருட்டு
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தை திருடப்பட்டுள்ளது.
மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் தேவி. இவருக்கு கடந்த 14ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால், குறை மாதத்திலேயே பிறந்துவிட்டதால் அக் குழந்தைக்கு ஜன்னி ஏற்பட்டது. மேலும்இதயத் துடிப்பு சரியாக இல்லாத காரணத்தால் இந்தக் குழந்தை இங்குபேட்டர் கருவியில் வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்றிரவு அந்தக் குழந்தை திருடப்பட்டது. நேற்றிரவு இங்குபேட்டர் கருவி உள்ள வார்டுக்குபணிக்கு வந்த நர்ஸ் குழந்தை காணாமல் போனதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே தேவியின் உறவினர்களிடம்குழந்தை திருடு போனதை தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த தேவியின் உறவினர்கள் மதிச்சியம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் காணாமல் போயின. இதையடுத்துபிரசவ வார்டில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் குழந்தை திருடப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரசவ வார்டில் போதில் பாதுகாப்பை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என போலீசார்கூறுகின்றனர்.
குறை மாதத்தில் பிறந்த அந்தக் குழந்தை அரை மயக்கத்தில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இங்குபேட்டரில் வைக்கப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. அந்தக் குழந்தையைப் போய் திருடிச்சென்றுள்ளனர்.
மருத்துவம ஊழியர்களே குழந்தையைக் கடத்தி விற்று விட்டதாக தேவியின் உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.


