For Daily Alerts
Just In
அவதூறு வழக்குகளுக்காக தனி அமைச்சகமே வரலாம்: பா.ம.க. கிண்டல்
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டாப் பகுதிகளில் கடந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியபோது, மக்கள் எலிக்கறிசாப்பிடுவதாக அறிக்கையில் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படும் வகையில் ஜி.கே.மணி கருத்து தெரிவித்ததாக கூறி,அவர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மணி நீதிமன்றத்தில் ஆஜராகிவிளக்கம் அளித்தார். பின்னர் வழக்கு விசாரணை நவம்பர் 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வெளியே வந்த மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல் வளைநெரிக்கப்பட்டு மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறது.


