மதுரை பாத்திமா கல்லூரி பொன் விழா
மதுரை:
மதுரையில் அன்னை ரோஸால் தொடங்கப்பட்ட பாத்திமா கல்லூரியின் பொன் விழா வரும் 25 ம் தேதி முதல் 3நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
மத்தியத் திட்டக் குழு உறுப்பினர் டாக்டர்.கே.வெங்கடசுப்ரமணியன் இவ் விழாவில் பங்கேற்று பொன் விழாஅரங்கைத் திறந்து வைக்கிறார். யுஜிசியின் துணைத் தலைவர் ராஜசேகரன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார்.
கல்லூரியின் முதல்வர் சகோதரி இக்னேஷியஸ் மேரி நிருபர்களிடம் கூறுகையில்,
எங்கள் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்களைக் கொண்டு அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குபல்வேறு பாடங்களில் பயிற்சி அளித்து வருகிறோம்.
கிராமப் புற மகளிர் நலன் கருதி ஆய்வகப் பயிற்சி, தையல், ஆடை வடிவமைப்பு, உள் மனையலங்காரம், உணவுத்துறை, மென்பொருள் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக ரூ. 1 கோடி ரூபாய்செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
வரும் 26 ம் தேதி நடைபெற உள்ள முன்னாள் மாணவர் சங்க விழாவில் தமிழக தலைமைச் செயலர் லட்சுமிபிரானேஷ் கலந்து கொள்கிறார் என்றார்.


