For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக காங். தலைவர் பதவியில் மாற்றம்: வாசன், ஜெயந்தி இடையே கடும் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி & சென்னை:

So Balakrishnanதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோ.பாலகிருஷ்ணனையும் செயல் தலைவர் இளங்கோவனையும் நீக்கிவிட்டுஒரே ஒரு புதிய தலைவரை நியமிப்பது குறித்து டெல்லி மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள் ஓயாத அலைகள் போல. பூசல்கள் ஓய்ந்தது போலதோன்றினாலும் அடுத்த விநாடியே ஏதாவது ஒரு இடத்தில் அடிதடியும், கலாட்டாவும் அரங்கேறிக்கொண்டிருக்கும். வேட்டிகள் கிழிக்கப்பட்டு கதர் சட்டைகள் அலங்கோலமாகும்.

மூப்பனார் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி.கே.வாசன் தலைமையில் தட்டுத் தடுமாறி இயங்கிக் கொண்டிருந்ததமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, சோனியாவின் தலைமையில், மதுரையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.

Ilangovanஅதன் பிறகு தனக்குத் தான் தலைவர் பதவி கிடைக்கும் என்று வாசன் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை.அவரை தேசிய பொதுச் செயலாளராக்கிய சோனியா, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேலிடப் பார்வையாளகவும்நியமித்தார்.

அதே நேரத்தில் இளங்கோவன் தலைவராக நீடித்தார். இதையடுத்து வாசன் கோஷ்டி கொடுத்த டார்ச்சர் காரணமாகபுதிய தலைவராக அபபோது வாசனின் ஆதரவாளராக இருந்த சோ.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.விறுவிறுப்பாக செயல்படும் இளங்கோவன் செயல் தலைவர் ஆக்கப்பட்டார்.

ஆனால், சோபா, இளங்கோவன் மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் குழப்பம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் சோ.பாவை டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை மூளைச் சலவை செய்தது. இதனால் அவரும்இளங்கோவனும் இணைந்து செயல்பட ஆரம்பித்தனர்.

இந்த இருவரும் சேர்ந்து வாசனை ஒதுக்க ஆரம்பித்தனர்.

இந்த இருவரின் ஒற்றுமையை சிறிதும் எதிர்பார்க்காத வாசன், திடீரென இரண்டு தலைவர்களும் சரியில்லை,இருவரையும் மாற்றி விட்டு வேறு தலைவரைப் போடுங்கள் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார்.

இதை வலியுறுத்தி அடிக்கடி கோஷ்டி மோதல்கள் நடந்து வருகின்றன. கட்சியின் தலைமை அலுவலகத்திலேயேகூட அடிதடி நடந்தது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் ஓயாத கோஷ்டிப் பூசலால் வெறுத்துப் போயுள்ளது டெல்லி மேலிடம். யாரைத்தலைவராகப் போட்டாலும் ஏற்றுக் கொள்ளாமல் குழப்பம் விளைவித்து வரும் காங்கிரஸ் தலைவர்களை என்னசெய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது.

Vasanகோஷ்டிப் பூசலுக்கு மூல காரணமாக விளங்கும் வாசனையே பிடித்து மாநிலத் தலைவராக்கிவிடலாமா எனஇப்போது காங்கிரஸ் தலைமை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம் வாசன், அதிமுக பக்கம் சாய்வதையும் தடுக்க முடியும் என சோனியா கருதுகிறார்.

ஆனால், வாசனை ஏற்க இளங்கோவனும் ஜெயந்தி நடராஜனும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அவர்களை கடந்த 3 நாட்களாக டெல்லியிலேயே தங்க வைத்து அவர்களுடன் சோனியாவின் ஆலோசகர்கள்தீவிரமாகப் பேச்சு நடத்தி வருகின்றனர்.

சோனியாவின் பேச்சுக்கு இளங்கோவன் கட்டுப்பட்டு விடுவார் என்று தெரிகிறது. வாசனை தலைவராக்கினாலும்இளங்கோவனுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும் எனவும், திமுகவுடனான உறவை வலுப்படும் பணிஅவரிடமே தொடர்ந்து தரப்படும் என்றும் தெரிகிறது. இது தொடர்பாக சோனியாவே இளங்கோவனுக்குஉறுதிமொழி தந்துள்ளதாகத் தெரிகிறது.

Jayanthi Natrajanஇந் நிலையில் தலைவர் பதவி எனக்கு வேண்டும், அல்லது வாசன் தவிர வேறு யாரிடமாவது அந்தப் பதவியைத்தர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கோரி வருவதாகத் தெரிகிறது.

இதனால், ஜெயலலிதாவுக்கு எதிராக மாநிலத் தலைவராக பெண்ணையே போடலாமா எனவும் காங்கிரஸ்ஆலோசித்து வருகிறது. ஆனால். ஜெயந்திக்கு தொண்டர்களிடையே சுத்தமாக ஆதரவே கிடையாது என்பதால்காங்கிரஸ் தலைமை தயக்கம் காட்டி வருகிறது.

அதே நேரத்தில் தங்கபாலு, அன்பரசு, திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன் போன்ற முக்கிய தலைவர்களுடன்ஜெயந்திக்கு நல்லுறவு நிலவுவதால் பிரச்சினைகளை அவர் சமாளித்து விடுவார் என்றும் காங்கிரஸ் தலைமைகருதுகிறது.

Soniaவாசனா, ஜெயந்தியா என்ற குழப்பத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றுதெரிகிறது.

எப்படியும் சோபா மற்றும் இளங்கோவன் ஆகியோரின் தலைகள் உருளப் போவது நிச்சயமாகிவிட்டது.

கூடுகிறது காங். ஒழுங்கு நடவடிக்கை குழு:

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அதன் தலைவர் கும அனந்தன்தலைமையில் அக்டோபர் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது.

பல நிர்வாகிகள் கட்சி தலைமையின் சொல் பேச்சு கேட்பதில்லை. தலைமை உத்தரவை மீறும் செயல்கள் அதிகரித்துவிட்டன. இந்த ஒழுகு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துவரும் காங்கிரஸார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X