For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.100 அபராதம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொது இடங்களில் மலம், சிறுநீர் கழித்தால் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சிஎச்சரித்துள்ளது.

இதுவரை இந்த அபராதத் தொகை வெறும் ரூ.10 ஆக மட்டுமே இருந்தது. அதிலும் இந்த எச்சரிக்கையைஅமலாக்குவதிலும் மாநகராட்சியிடம் பெரும் மெத்தனம் நிலவி வந்தது. கடந்த பல மாதங்களாக அசுத்தம்செய்வோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்போது மாநகராட்சி அதிகாரிகள் அபராதத் தொகையை ரூ.100 வரை உயர்த்தியும், தவறு செய்வோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கவும் அதிரடி முடிவெடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக வழிபாட்டு தலங்கள், மெரீனா கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இத் திட்டம்செயல்படுத்தபட உள்ளது.

மேலும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் (1948 பிரிவு 5)ன் கீழ் கடைகள் மற்றும் வர்த்தகநிறுவனங்கள் நடத்துவோர் தங்களது இடங்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு உரிய கழிப்பிடவசதிகள் அமைத்திருக்க வேண்டுமென மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது மிக நல்ல உத்தரவு தான் என்றாலும், ஊருக்கு உபதேசம் செய்யும் முன் முதலில் மாநகராட்சி தனதுகழிப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். மாநகராட்சி கழிப்பிடங்களில்நுழைந்தால் மூக்கில் ஓட்டையே விழுந்துவிடும் அளவுக்கு மகா கப்பு வீசுகிறது.

மேலும், கழிப்பிடங்களில் தண்ணீர் வசதியே இருப்பதில்லை. முதலில் இவற்றை மாநகராட்சி சரி செய்யவேண்டியது அவசியமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X