• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் ரெளடி பண்ணையார் போலீசாரால் சுட்டுக் கொலை- தூத்துக்குடியில் பதற்றம்

By Super
|

சென்னை:

சென்னையில் பிரபல ரெளடி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன்வெங்கடேசன் (வயது 36). அந்த ஊரின் பண்ணையாரான இவன் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. பெரும்பணக்காரனான வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு பெயர் போனவன்.

இவர் மீது கட்டைப் பஞ்சாயத்து தவிர பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளும் உள்ளன. பயங்கர ரெளடியானஇவன் சமீபத்தில் சென்னை வந்தான். கூலிப் படையை வைத்துக் கொண்டு இங்கும் கட்டப் பஞசாயத்திலும்அடிதடியிலும் ஈடுபட்டு வந்தான். மேலும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்து வந்தான்.

ரூ. 75 லட்சம் பேரம்:

சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வெங்கடேச பண்ணையார் மீது இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. பன்னாட்டு நிறுவனம் ஒன்றிடம் பணம் கேட்டு வெங்கடேச பண்ணையார் மிரட்டியதாலும் ஒருபுள்ளியைக் கடத்தி வைத்து ரூ. 75 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாகவும் இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இதையடுத்து இவனை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால், தலைமறைவாகி போலீசாருக்கேகண்ணாமூச்சி காட்டி வந்தான்.

இதையடுத்து இவனது சகாக்களை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்த போலீசார் வெங்கடேனின்இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.

அபார்ட்மெண்டில் பதுங்கி...

சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில்வெங்கடேச பண்ணையார் தனது ஆட்களுடன் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் இன்று அதிகாலை 4.30மணிக்கு அங்கு விரைந்தனர்.

வீட்டை போலீசார் தட்டியபோது திறக்காமல் இருந்த வெங்கடேசன், போலீசார் கதவை உடைத்துக் கொண்டுஉள்ளே புகுந்தபோது தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டதில்அந்த இடத்திலேயே அவன் பலியானான்.

அந்த வீட்டை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த ரூ. 75,000 பணம், கிரெடிட் கார்டுகள், 6 செல்போன்கள்,வங்கி பாஸ் புத்தகங்கள், 25 பவுன் தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

சமீபத்தில்தான் பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி சுட்டுக் கொல்லப்பட்டான். இந் நிலையில் மேலும் ஒருரவுடி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். சென்னையின் பயங்கரகிரிமினல்கள் குறித்து சமீபத்தில் ரகசியசர்வே எடுத்த கமிஷ்னர் விஜய்குமார் அவர்களை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் பதற்றம்:

இதற்கிடையே வெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தூத்துக்குடிமாவட்டத்தின் சில பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. அவனது சொந்த ஊரான மூலக்கரைப்பட்டி உள்ளிட்டபகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மூலக்கரைப் பட்டி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்டு கொலை:

இதற்கிடையே, போலீஸார் திட்டமிட்டே வெங்கடேச பண்ணையாரை சுட்டுக் கொன்று விட்டதாக அவரதுவழக்கறிஞர் ஜோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வெங்கடேச பண்ணையாரிடம் 1,500 ஏக்கர் நிலம்உள்ளது. இவற்றை அரசு பறிமுதல் செய்து விட்டது. அவரிடம் ஏராளமான பணம் உள்ளது. எனவே பணம் கேட்டுயாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

திட்டமிட்டே, சென்னையில் வைத்து அவரை போலீஸார் கொன்று விட்டனர் என்றார். வெங்கடேசனின் உடல்கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆதரவைப் பெற முயற்சி:

பல்வேறு கொலைகளில் வெங்கடேச பண்ணையாருக்கு தொடர்புண்டு. அதில், சமீபத்திய கொலை தான் அகிலஇந்திய தேவர் முன்னேற்றக் கழக இளைஞரணிச் செயலாளர் கட்டத்துரையின் கொலை. கட்டத்துரையின்கொலையாளிகளுக்கு வெகங்கடேச பண்ணையார் முழு உதவி செய்ததாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் சமீப காலமாக தான் போலீசாரால் குறி வைக்கப்படுவதை உணர்ந்த வெகங்கடேச பண்ணையார்தானாகவே முன் வந்து சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.காங்கிரஸ் தொண்டர்களையும் தாக்கினார். இருந்தாலும் அதிமுக மேலிடத்தின் நன் மதிப்பைப் பெற முடியவில்லை.

அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு தானே தலைவராகவும் இருந்துவந்தார் வெங்கடேச பண்ணையார்.

போலீசின் எண்கெளன்டர் அறிக்கை:

இந் நிலையில் வெங்கடேச பண்ணையாரை சுடப்பட்டது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பங்குச் சந்தை ஊழலில் தொடர்புடைய கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு புள்ளியை வெங்கடேசன் ஒரு வாரமாக கடத்திபோய் வைத்திருந்தான். அவரை விடுவிக்க ரூ. 75 லட்சம் கேட்டு பேரம் பேசி வந்தான். இது குறித்து குற்றப் பிரிவுபோலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெங்கடேசனைப் பிடிக்க துணை கமிஷ்னர் கிருஷ்ணமூத்தி, உதவி கமிஷ்னர் லட்சுமிநாதன்,இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், இக்பால் ஆகியோர் தலைமையில் தனிப்படை உருவாக்கப்பட்டது. இந்தப்படையிடம் முதலில் சிக்கியது பெப்சி முரளி. இவரிடம் விசாரித்தபோது தான் வெங்கடேசன் லயோலா கல்லூரிஅருகே மகாலட்சுமி அபார்ட்மெண்ட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்தப் படை இன்று அதிகாலை இந்த வீட்டின் கதவைத் தட்டியது. ஆனால், கதவுதிறக்கப்படவில்லை. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த போலீசாரை நோக்கி வெங்கடேசன் மூன்றுரவுண்டு சுட்டார்.

இதனால் போலீசார் வெங்கடேசனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதில் வெங்கடேசன் அந்த இடத்திலேயேபிணமானான்.

அவனுடன் இருந்த முரளி, சுரேஷ், ஜான்சன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X