ப்ளூ பிலிம் பார்த்துவிட்டு மனைவிக்கு கொடுமை: செக்ஸ் சைகோவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
ப்ளூ பிலிம் பார்த்துவிட்டு இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்ளச் சொல்லி மனைவியைக்கொடுமைப்படுத்திய கணவனின் ஜாமீன் மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
திருச்சியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ரயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கும் 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைஉண்டு.
ப்ளூ பிலிம் பார்க்கும் பழக்கமுள்ள பாலாஜி பல வகைகளிலும் வசந்தியை செக்ஸ்ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்.இயற்க்ைககு மாறான வகையில் பாலுறவில் ஈடுபடுமாறு தொல்லை செய்துள்ளார். அதை வசந்தி மறுத்தபோதுஅடித்து, உதைத்துள்ளார்.
மேலும் தனது போலீஸ் துப்பாக்கி காட்டி மிரட்டி முறைதவறிய பாலியல் இச்சையைத் தீர்த்துள்ளார். மெல்லமெல்லஅவரது பாலியல் டார்ச்சர் அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட செக்ஸ் சைக்கோவாகவே பாலாஜி மாறஆரம்பித்துள்ளார்.
இதை வசந்தி எதிர்த்தபோதெல்லாம் தனது பெற்றோருடன் சேர்ந்து கொண்டு கூடுதலாக வரதட்சணை வாங்கிவருமாறு பிளாக் மெயில் செய்துள்ளார்.
செக்ஸ் கொடுமை தாங்க முடியாத வசந்தி திருச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.அத்துடன் வீட்டில் பாலாஜி வைத்திருந்த ப்ளூ பிலிம் சிடிக்களையும், செக்ஸ் புத்தகங்களையும் காவல் நிலையத்தில்ஒப்படைத்தார்.
இதன் அடிப்படையில் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது தாயார் ஷியாமளாதேவி, தந்தைலட்சுமிகுமார் ஆகியோரை வரதட்சணைக் கொடுமை சட்டத்தில் கைது செய்தனர்.
தற்கொலைக்கு தூண்டுதல், விருப்பமற்ற கருச்சிதைவுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் இந்த மூவர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாலாஜியும், ஷியாமளாதேவியும் கைது செய்யப் பட்டனர். இதையடுத்து இவர்கள் ஜாமீன்கோரியும், பாலாஜியின் தந்தை முன் ஜாமீன் கோரியும் உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். அவர் தனதுதீர்ப்பில் கூறியதாவது:
வசந்தியை பாலாஜி, குழந்தை கையில் கிடைத்த பொம்மை போலவும், குரங்கு கையில் கிடைத்த பூமாலைபோலவும் சிதைத்துள்ளார். பாலியல்ரீயில் கொடுமைப்படுத்தியுள்ளார். கடுமையான இக் குற்றத்துக்கு ஜாமீன்வழங்க முடியாது. எனவே இம்மனு தள்ளுபடி செய்யப்பபடுகிறது.
அதே நேரம் பாலாஜியின் தாயார் ஷியாமளாவின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன்வழங்கப்படுகிறது.
பாலாஜியின் தந்தை லட்சுமிகுமார் மீதான குற்றச்சாட்டுகள் சிறிய அளவில் இருப்பதால் அவருக்கு இந்த நீதிமன்றம்முன்ஜாமீன் வழங்குகிறது என்றார் நீதிபதி.

