For Daily Alerts
Just In
திமுகவுடன் மீண்டும் மோதுகிறார் இல.கணேசன்
மயிலாடுதுறை:
பிரதமர் வாஜ்பாய் குறித்து விமர்சனம் செய்ய சோனியா காந்தி யார்? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது எனபாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன் கேட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமரின் தேசபக்தி குறித்து கடுமையாக விமர்சனம்செய்து வருகிறார் சோனியா காந்தி. மாறாக, பிரதமரோ அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சோனியாகாந்தியைப் பாராட்டிப் பேசியுள்ளார். இது பிரதமரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
பிரதமரை விமர்சிக்க சோனியாவுக்கு என்ன தகுதி உள்ளது? இவர் யார் என்பது இந்தியாவுக்கே தெரியும்.
தேசிய ஜனநிாயகக் கூட்டணியிலிருந்து திமுகவை விரட்ட நாங்கள் முயற்சிக்கவில்லை. ஆயினும், மத்தியில் ஒருநிலை, மாநிலத்தில் வேறு என்ற நிலை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது என்பதை திமுகவும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

