For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜனனிக்கு சிறைக்காவல் நீட்டிப்பு
மதுரை:
கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள மதுரை இளம் பெண் ஜனனி அவரது தாயார் ரமீஜா மற்றும் கார்டிரைவர் சதீஷ் ஆகியோரின் சிறைக் காவல் வருகிற 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கஞ்சா கடத்திய வழக்கில் ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் இன்று மதுரை போதைப் பொருள் சிறப்புத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.
நீதிபதி சம்பத் குமார் அவர்களது சிறைக் காவலை 17ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் பின்னர்மூவரும் மீண்டும் திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

