For Daily Alerts
Just In
ஆயுத பூஜை: ரோட்டில் பூசணிக்காய் உடைக்க போலீஸ் தடை
சென்னை:
ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை நடத்திவிட்டு ரோட்டில் பூசணிக்காயை உடைத்தால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என சென்னை நகர காவல்துறை எச்சரித்துள்ளது.
வழுவழுக்கும் பூசணிக்காய்களால் பல விபத்துக்கள் ஏற்படுவதால், தெருக்களில் பூசணியை உடைக்க காவல் துறைதடை விதித்துள்ளது.
ஆயுத பூஜையின்போது திருஷ்டி கழிப்பதற்காக வீடுகள், கடைகள் முன் பூசணிக்காய் உடைப்பது வழக்கம்.சாலையின் நடுவே பெரிய பூசணிக் காய்களைப் போட்டு உடைப்பதால் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள்பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனால் இந்த முறை போலீஸார் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். பூசணிக்காய் உடைக்க விரும்புவோர், நடுரோட்டில் அதை செய்யக் கூடாது. வீட்டுக்குள்ளோ அல்லது கடைக்குள்ளே வைத்துத்தான் பூசணிக்காய் உடைக்கவேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர். மீறி உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்எச்சரித்துள்ளனர்.

